ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஆவடி:  இந்திய ரயில்வே துறையில் 109வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து, ஆவடி மாநகர சி.ஐ.டி.யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி ரயில் நிலையம் அருகில் நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர் மா.பூபாலன் தலைமை தாங்கினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என கூறி மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

போராட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் சசிகுமார், ஐசிஎப் ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜாராம், லோகோ வழித்தட பணியாளர் சங்கத்தின் இணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் சிஐடியூ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன் தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், சிஐடியூ நிர்வாகிகள் சி.ஆறுமுகம், உட்பட பலர் கைதாகினர். கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: