கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழக உயர்க்கல்வித்துறை அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு வருகின்ற ஜூலை 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 20 முதல் ஆன்லைனில் www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 6வது கட்டமாக ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி என்றெல்லாம் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்கல்வித் துறையும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

வழக்கமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் மாணவர் சேர்க்கைகாவும் நேரடியாக கல்லூரிகளுக்கு வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக அதிகளவு மாணவர்கள் திரள்வார்கள். கொரோனோ தொற்று காரணமாக அதிகளவு மாணவர்கள் கல்லூரிகளில் கூடுவதை தடுக்கும் வகையில் தற்போது ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: