தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரயில்வே துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.யூ.இ., மற்றும் சி.ஐ.டி.யூ., அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!!

சென்னை:  தமிழ்நாட்டில் இரயில்வே துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் டி.ஆர்.யூ.இ., மற்றும் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சென்ட்ரல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரயில்வே துறையை தனியார்மயமாக்கப்பட்டால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தாம்பரம் இரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது இரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து அவர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே நாகர்கோவில் இரயில் நிலையம் அருகிலும் தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதாவது இரயில்வே துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்டுக்கொண்டனர். இதேபோன்று, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

Related Stories: