இந்தியாவின் மக்கள் தொகை 2048ம் ஆண்டில் 160 கோடியாக உயரும் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்

புதுடெல்லி : இந்தியாவின் மக்கள் தொகை 2048ம் ஆண்டில் 160 கோடியாக உயரும் என்றும் அதன் பின்னர் 2100ம் ஆண்டில் படிப்படியாக குறைந்து 109 கோடியாகும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சீனா 143 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 143 கோடி மக்கள் தொகையுடன் 2ம்  இடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.

2017 உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள், இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 195 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய, பிராந்திய, தேசிய மக்கள்தொகை மற்றும் இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்கள் ஆகியவற்றை கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்,  தி லான்செட் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2064ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 973 கோடியாக உயரும், அதன் பின்னர்  2100ல் 879 கோடியாக  சுருங்கிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணிப்புகள் ஐ.நா. கணித்துள்ள மக்கள் தொகையை விட சுமார் 200 கோடி குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதுஉலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் 2050 ஆண்டுக்குள் மக்கள்தொகையின் உச்சங்களை பதிவு செய்யும்.

Related Stories: