சென்னையில் 4.24 லட்சம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சென்னை: சென்னையில் தினசரி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 670 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 108 பேர் 14 நாட்கள் நிறைவு செய்துள்ளனர். மீதம் 1 லடசத்து 19 ஆயிரத்து 872 பேர் தற்போது தனிமையில் உள்ளனர். கொரோனா பாதித்தக்கபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 84 ஆயிரத்து 117 பேர் 14 நாட்கள் தனிமையை நிறைவு செய்துள்ளனர். 1 லட்சத்து 58 ஆயிரத்து 846 பேர் தற்போது தனிமையில் உள்ளனர்.

வெளி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 74 ஆயிரம் பேர், காய்ச்சல் முகாமில் பங்கேற்ற அறிகுறி உள்ள 26 ஆயிரம் பேர் என்று மொத்தம் நேற்று வரை 4.24 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தவறான தகவல் அளித்த 160 பேர்: சென்னையில் கடந்த 14ம் தேதி 11 ஆயிரத்து 539 பேர் பரிசோதனைக்கா மாதிரிகளை அளித்துள்ளனர். இதில் 160 பேர் தவறான முகவரி மற்றும் தொலை பேசி எண்ணை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: