திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறைகேடு சிட்லபாக்கம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் பதவியேற்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் 7 டன் குப்பை சேகரமாகிறது. குப்பை சேகரிக்கும் பணியில் 36 பேரூராட்சி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 25 பேர் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தனியார் நிறுவனம் மூலம் சுமார் 100 பேர் பணியாற்றுகின்றனர். இந்த பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து பேரூராட்சிகளின் உயர் அதிகாரிகள் 10 நாட்களுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு கடந்த மே மாதம் 19ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிளார்க் ரவிச்சந்திரன், மேஸ்திரி நரசிம்மன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர். இதனையடுத்து, மாடம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சிட்லபாக்கம் பேரூராட்சியை கவனிக்கும் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு அவர் பேரூராட்சி பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த லதா சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

Related Stories: