இந்தியாவில் 9 மாநிலங்களில் வெட்டுக்கிளி தடுப்பு நடவடிக்கை: மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு!!!

இந்தியாவில் 9 மாநிலங்களில் வெட்டுக்கிளி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெட்டுக்கியானது கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் பல பகுதிகளில் படையெடுக்க தொடங்கி விட்டது. இதனால் அதிகளவு விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு மக்கள் தினந்தோறும் உணவின்றி தவித்து வந்தனர். இந்த வெட்டுக்கிளிகளின் அட்டகாசமானது பல மாநிலங்களில் பொருளாதாரரீதிகாவும் பல்வேறு பிரச்சனைகளை கொடுத்து வந்தது.

இதனால், அரசு வெட்டுக்கிளிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்தியாவின் 9 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் அட்டகாசத்தை ஒழித்து விட்டதாக மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. வெட்டுக்கிளி படையெடுப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய வேளாண் அமைச்சகம் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 658 ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த தடுப்பு நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் ஜூலை 12 ம் தேதி வரை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனைத்தொடர்ந்து, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 781 ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தடுப்பு பணிகளில் 60 குழுக்களும், 200க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியாளர்களும் வெட்டுக்கிளைகளை அழிக்கும் செயலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவற்றில் 15 ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டதாகவும் வேளாண் அமைச்சகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பாலைவன பகுதியில் தேவைக்கேற்ப பெல் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் சிறிய அளவில் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் அதிகளவில் வெட்டுக்கிளிகளின்  அட்டகாசம் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: