திருமழிசை மார்க்கெட்டால் வியாபாரிகள் கடும் பாதிப்பு கோயம்பேடு மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும்: துணை முதல்வரிடம் வணிகர் சங்க பேரமைப்பு நேரில் கோரிக்கை

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில கூடுதல் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.சாமுவேல், கோயம்பேடு அங்காடி கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், தலைமை திட்ட அலுவலர் என்.எஸ்.பெரியசாமி மற்றும் கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்பின்போது, மனு ஒன்றை அளித்தனர். அதில், “கடந்த சில நாட்களாக பெய்த மழையால் திருமழிசை மார்க்கெட் அமைந்துள்ள இடத்திற்கு காய்கறிகளை கொண்டு வரவும் முடியவில்லை. அதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

Related Stories: