தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1,089-லிருந்து 1,456-ஆக அதிகரிப்பு..: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் 1,089-லிருந்து 1,456-ஆக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை குறித்து தலைமைச் செயலர் சண்முகம் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை 10ம் தேதி நிலவரப்படி எத்தனை நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்பதை சுகாதாரத்துறை, தலைமைச் செயலருக்கு அளித்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 34 மாவட்டங்களில் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை நோய் கட்டுப்பாடு பகுதிகள் உள்ளன என்பது குறித்த விவரம் பின் வருமாறு..

அரியலூரில் - 3, செங்கல்பட்டு - 29, சென்னை - 276, கோவை - 29, கடலூர் - 49, திண்டுக்கல் - 22, ஈரோடு - 10, கள்ளக்குறிச்சி - 25, காஞ்சிபுரம் - 64, கன்னியாகுமாரி - 6, கரூர் - 1, கிருஷ்ணகிரி - 8, மதுரை - 108, நாகப்பட்டினம் - 11, புதுக்கோட்டை - 19, ராமநாதபுரம் - 16, ராணிப்பேட்டை - 13, சேலம் - 138, சிவகங்கை - 16, தென்காசி - 16, தஞ்சாவூர் - 17, நீலகிரி - 6, தேனி - 33, திருவாரூர் - 47, தூத்துக்குடி - 7, திருச்சி - 14, திருநெல்வேலி - 6, திருப்பத்தூர் - 85, திருப்பூர் - 97, திருவள்ளூர் - 63, திருவண்ணாமலை - 85, வேலூர் - 57, விழுப்புரம் - 23, விருதுநரில் - 57 என மொத்தம் 1456 நோய் கட்டுப்பாடு பகுதிகள் உள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: