கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளது: மியாட் மருத்துவமனை தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை, மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிட்-19ல் (கொரோனா) இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். அவர் தனி அறையில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: