காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளில் தமிழகத்தில் காலியாக உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருந்தாலும், கொரோனா காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு படி தமிழக தேர்தல் ஆணையம் செயல்படும். தேர்தல் தேதி முடிவு செய்யவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது, என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Related Stories: