போலீசார் மொபட்டை பறிமுதல் செய்ததால் திருநங்கை தற்கொலை: காவல் நிலையம் முற்றுகை

சென்னை: போலீசார் மொபட்டை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து திருநங்கைகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் சபீனா (19). திருநங்கையான இவர், நேற்று முன்தினம் இரவு வள்ளுவர் கோட்டம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரை பார்த்து, சபீனா உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார், அங்கிருந்த சபீனாவின் மொபட்டை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

நள்ளிரவில் நண்பர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் வந்த சபீனா, தனது மொபட்டை கொடுக்குமாறு போலீசாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள், வாகனத்திற்கான ஆவணங்களை கொண்டு வந்து காட்டி விட்டு மொபட்டை எடுத்து செல், என்று கூறியுள்ளனர். நீண்ட நேரம் கெஞ்சி கேட்டும், மொபட்டை தர மறுத்துவிட்டனர். அதைதொடர்ந்து சோகத்துடன் கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற சபீனா,  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருநங்கைகள் கோடம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், போலீசார் சபீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: