தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா? : முதல்வர் பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்துள்ள 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, கொரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், தனிமைப்படுத்தும் முறைகள் குறித்து விவாதித்தக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய குழுவில் உள்ள டாக்டர்கள், கொரோனா நோயை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் சில ஆலோசனைகளையும் வழங்கினர்.

மத்திய குழு சென்னை வருகை!!

*தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்வையிடவும், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா என்பது குறித்து ஆய்வு மற்றும் விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை 7 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழகத்திற்கு 3வது முறையாக நேற்று அனுப்பி வைத்துள்ளது.

*அதன்படி, மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய அரசின் இணை செயலாளர் ராஜேந்திர ரத்னு, டாக்டர்கள் ரவீந்திரன், சுஹாஸ் தந்துரு, மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் மற்றும் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

*இதையடுத்து, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மத்திய குழுவினர் நேரில் சென்றனர். அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

*தொடர்ந்து சென்னையில் புதிதாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பரிசோதனை மையத்துக்கும்சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

*பிறகு கொரோனா நோய் அதிகம் பாதித்த 11 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர்.

Related Stories: