2வது ஆண்டாக முதலிடம் மீடியா ஏஜென்சி சாதனை

சென்னை: டென்ட்சு எக்ஸ் இந்தியா என்ற மீடியா ஏஜென்சி நிறுவனம், புதிய வர்த்தக நடவடிக்கைகளை அதிகமாக ஈர்த்து முதலிடம் பிடித்துள்ளது. காம்வர்ஜன்ஸ் என்ற சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனம், உலக அளவிலான மார்க்கெட்டிங் சேவை குழுமங்கள் மற்றும் சந்தைகளில் இருந்து தகவல்களை திரட்டி விளம்பர மற்றும் மீடியா நிறுவனங்களை ஆய்வு செய்கிறது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் புதிய வர்த்தகங்களை ஈர்த்தது, ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்தது போன்றவற்றின் அடிப்படையில் 21 மீடியா ஏஜென்சிகளை அளவீடு செய்தது.

அதில், டென்ட்சு ஏஜிஸ் நெட்வொர்க்கின் டென்ட்சு எக்ஸ் இந்தியா என்ற மீடியா ஏஜென்சி நிறுவனம் புதிதாக 30.9 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை ஈர்த்து முதலிடம் பிடித்தது. அதோடு ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த நிறுவனம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து டென்ட்சு எக்ஸ் இந்தியா நிறுவன முதன்மை செயல் அதிகாரி திவ்யா கரானி கூறுகையில், “டென்ஸ்சு எக்ஸ் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாகவே வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. பல நிறுவனங்கள் வர்த்தக வாய்ப்பை எங்களுக்கு வழங்கியிருப்பது எங்கள் அணுகுமுறைக்கும், மதிப்புக்கும் சான்றாக திகழ்கிறது. தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளோம்” என்றார்.

Related Stories: