உத்தமபாளையத்தில் குப்பைகளை கொட்டி சாலை அமைப்பு

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் குப்பைகளை கொட்டி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி 4ம் வார்டுக்குட்பட்டது வாட்டர் டேங்க் ரோடு. இப்பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதியில் நீண்ட காலமாக சாலை சீரமைக்கப்படவில்லை. சாலையை சீரமைக்கும்படி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையையேற்று மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்ப குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் அவற்றின் மீது தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சாலை விரைவில் சேதமடைந்து, அரசு பணம் விரயமாகும் நிலை உள்ளது. இது ெதாடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: