குவைத், அபுதாபியில் இருந்த 371 பேர் சென்னைக்கு வருகை

சென்னை: குவைத், அபுதாபி, கென்யாவில் தவித்த 371 பேர் சென்னைக்கு வந்தனர். கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் குவைத்தில் சிக்கிய 177 பேர் தனியார் சிறப்பு மீட்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தனர். இதில், அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு 167 பயணிகளுடன் சென்னை வந்தது. அதில் 121 ஆண்கள், 32 பெண்கள், 13 சிறுவர்கள், 1 குழந்தை அடங்குவர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரி விடுதிக்கு 76 பேரும், கட்டணம் செலுத்தி தங்க தனியார் ஓட்டல்களுக்கு 91 பேரும் தனித்தனி பஸ்களில் அனுப்பப்பட்டனர். கென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரில் இருந்து ஏர் இந்தியா அலையன்ஸ் சிறப்பு மீட்பு விமானம் 27 இந்தியர்களுடன் டெல்லி, ஐதராபாத் வழியாக நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அவர்களில் 17 ஆண்கள், 8 பெண்கள், 2 சிறுவர்கள் அடங்குவர்.  அவாகள் 14 நாட்கள் தனிமைப்படுத்த 8 பேர் இலவச தங்குமிடங்களான தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரிக்கும், 19 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

Related Stories: