தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு; முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை என தகவல்..!!!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன்  செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள //tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் இருவர் பங்கேற்றனர்.

அப்போது, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், அமைச்சர் தங்கமணி ரூ.5 கோடிக்கான  காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். இதற்கிடையே, அமைச்சர் தங்கமணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காலை முதல்வருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதல்வருக்கு பரிசோதனை செய்யவுள்ளதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Stories: