ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீடுகளில் இருந்ததால் மின் அளவு கூடுதலாவது இயல்பு: அமைச்சர் தங்கமணி அறிக்கை

சென்னை: ஊரடங்கு காலத்தில் குடும்பத்தினர்  அனைவருமே வீடுகளில் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் மின் அளவு  கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட காலத்தில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே வீடுகளில் இருந்ததால், அவர்கள் பயன்படுத்தும் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு. மேலும், கொரோனா காலத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கணக்கெடுப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவையே அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனை கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்கிற உணர்வையும், அவப்பழியையும் அரசு மீது சுமத்த திமுக தொடர்ந்து திட்டமிட்டு, பிரசாரம் செய்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தினமும் உரிய திட்டங்களை தீட்டி, பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தியும், பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், கொரோனா தடுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிவரும், சாமானிய விவசாய குடும்பத்தில் பிறந்த முதலமைச்சரை பார்த்து, ராஜ வாழ்க்கை வாழ்கின்றார் என்று செந்தில் பாலாஜி சொல்வது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: