நெல்லையில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!

திருநெல்வேலி:  நெல்லை மாவட்டத்தில் மேலும் புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1125ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றானது சீனாவில் தொடங்கி, உலக அளவில் பெருகி அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது, இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா மாநிலம்தான்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனா தொற்று முக்கிய இடத்தை பெற்று வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நெல்லையில்  நேற்று வரை 1030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 675 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால்,  புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1125ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: