கொரோனாவின் தேசமாகும் சென்னை:15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,837 பேர் சிகிச்சை; இன்று மட்டும் 28 பேர் பலி!!

சென்னை :சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக உள்ளது. 1,054 பேர் உயிரிழந்த நிலையில், 42,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24, 890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் 10,305 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 1,214 பேரும், மணலியில் 531 பேரும்  மாதவரத்தில் 949 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,275 பேரும்,  ராயபுரத்தில் 2,416 பேரும், திருவிக நகரில் 1,858 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர் மண்டலத்தில் 1,360 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2,349 பேரும், தேனாம்பேட்டையில் 2,317 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,837 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* வளசரவாக்கத்தில் 1,245 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 968 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,913 பேரும்  பெருங்குடியில் 919 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 621 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: