மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக கிராமங்களில் உள்ள மக்கள், வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் தர் ஆய்வு காஞ்சிபுரம் - செங்கல்பட்டு  சாலை, அய்யம்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து, அபராதம் விதித்து, முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதேபோல் ஏகனாம்பேட்டை, கீழ் ஒட்டிவக்கம், ராஜாம்பேட்டை, ஆகிய பகுதிகளில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பவானி ஆகியோர் முகக் கவசங்கள் அணியாமல் வாகனம் ஓட்டிய 75 பேருக்கு, தலா 100 அபராதம் விதித்து, முக கவசங்கள் வழங்கினர்.

Related Stories: