லடாக்கின் சிந்து நதிக்கரையில் பிரதமர் மோடி சிந்துதர்ஷன் பூஜா செய்த காட்சிகள் வெளியீடு!!

ஸ்ரீநகர் :லடாக் எல்லைக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு சிந்துதர்ஷன் பூஜா செய்த காட்சிகள் வெளியாகி உள்ளது. சீன எல்லையோரம் அமைந்துள்ள நிமு விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அவருக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவ தளபதி நரவனே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அங்குள்ள நீர் நிலையில், மோடி சிந்து தர்ஷன் பூஜா செய்தார். சிந்து நதிக்கரையில்  2 குருமார்கள் பூஜைகளை மேற்கொள்ள, பிரதமர் மோடி வேத மந்திரங்களை ஓதுனார். ஒவ்வொரு ஆண்டும் பௌணர்மி நாளில் சிந்து நதிக்கரையில், சிந்து தரிசனம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், யை இந்தியாவின் ஒற்றுமை, அமைதியான சகவாழ்வு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தின் அடையாளமாக பாவித்து இந்தஸ் (அல்லது சிந்து) நதியை மக்கள் வணங்குகின்றனர். மேலும் இந்த திருவிழாவில், உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புகளோடு ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்தோருக்கு மோடி வீரவணக்கம் செலுத்தினார். பிறகு காயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Related Stories: