சவூதியை முந்தும் மராட்டியம்; சீனாவை முந்திய டெல்லி : கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுடன் போட்டி போடும் இந்திய மாநிலங்கள்!!

டெல்லி :  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் முதன்முறையாக காலூன்றிய கொரோனா உயிர்க்கொல்லியால், அங்கு இதுவரை 4,634 பேர் உயிரிழந்த நிலையில், 83, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் பட்டியலில் சீனா 22ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டியது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 85.5 சதவீதமும், மொத்த பலியானோர் எண்ணிக்கையில் 87 சதவீதமும், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் ஏற்பட்டுள்ளன.இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் கொண்டுள்ள நாடாக  இந்தியா விளங்குகிறது.

ஜூன் 1 அன்று, இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.6% ஆக இருந்தது. ஆனால் ஜூன் 30ம் தேதி இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.7% ஆக சரிந்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு விகிதத்தையே மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முந்தி உள்ளன.

இந்திய மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, பகீர் தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொண்ட மஹாராஷ்டிரா மாநிலம், உலக நாடுகள் பட்டியலில் 15வது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவை முந்துகிறது. அதே போல தமிழகமும் டெல்லியும் கொரோனா பாதிப்பில் 22ம் இடத்தில் இருக்கும் சீனாவை முந்தியுள்ளது. இதே போன்று, குஜராத் ஸ்விட்ஸர்லாந்தையும் உத்தரபிரதேசம் ஐயர்லாந்தையும், மேற்கு வங்கம் ஜப்பானையும் கொரோனா பாதிப்பில் முந்துகிறது.

Related Stories: