கடலூர் என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி: மற்ற ஊழியர்களை மீட்கும் பணி தீவிரம்!!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் மற்ற ஊழியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஊழியர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக  காட்சியளிக்கிறது. இதனால், ஊழியர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதுவரை நெய்வேலி என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில், 2 மாதத்தில் 4 முறை தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதேபோல் கடந்த மே மாதம் இதே அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்துள்ளானது. அதில் 8 தொழிலாளர்கள் தீக்காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவற்றில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இதேநிலையில்தான் இன்றும் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போதும் 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து, இவர்கள் அனைவரும் என்.எல்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சி நிறுவனத்தில் பாதுகாப்பு பணி என்பது மெத்தமனாக இருப்பதும், அதிகளவு வேலை செய்யப்படுகிறது என்பதும் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: