காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் வெள்ளி பல்லக்கு மாயம்: சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் ஏற்கனவே உற்சவர் சிலை செய்ய தங்கம் பெறப்பட்டதில் மோசடி நடைபெற்றதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் ஏகாம்பரநாதர் கோயிலில், ஊரடங்கு காலத்தில் கல்லிழைத்த சுப்ரமணியர் கிரீடம், கல்லிழைத்த வேல், கல்லிழைத்த பலகை, உற்சவர் அம்மன் பாதம் ஆகியவை மாயமாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டதற்கு, அதிகாரிகள் பதில் அளிக்க மறுப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

மேலும், கோயிலில் ஓய்வு பெற்ற பிறகு சட்டவிரோதமாக சில அதிகாரிகள், சிலை கடத்தல் தொடர்புடைய பல ஆவணங்களை மாற்றியும் மறைத்தும் வருகின்றனர். ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நகைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு, அந்த உத்தரவும் இதுவரை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோயிலில் திருடுபோன தொன்மையான கல்லிழைத்த தங்க வேல், தங்க கிரிடம், கல்லிழைத்த தங்க பலகை, வெள்ளி பல்லக்கு இவைகள் தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், முன்னாள் செயல் அலுவலர் முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

Related Stories: