அரசாணையின்படி உயர்த்தி வழங்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3600 இதுவரை வழங்கவில்லை: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் புகார்

செங்கல்பட்டு : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தூய்மை  பணியாளர்களுக்கு அரசாணையின்படி உயர்த்தி வழங்கப்பட்ட ₹3600 இதுவரை வழங்கவில்லை என புகார் எழுப்பினர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சு.பரணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ப.குணசேகரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் பொ.சார்லஸ் சசிகுமார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பேரிடர் காலங்களில் அவசர அவசியம் கருதி சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்ய, பேரிடர் கால நிதியை ஊராட்சி ஒன்றியங்களுக்கு விடுவிக்க கலெக்டருக்கு செயற்குழு வலியுறுத்துகிறது.  வட்டார வளர்ச்சி அலுவலர்களாக 2 நிலைகளிலும் கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி பணி முடித்த மூத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உயர் பதவிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டவர்களும்  பதவி உயர்வு துறப்பு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை மூப்பு அடிப்படையில் தலைமை இடத்தில் பணியமர்த்த வேண்டும்.

இளையவர்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணியமர்த்தி  வாய்ப்பு வழங்கவும், மூப்பு அடிப்படையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பதவியை வழங்க வேண்டும். கொரோனா தாக்கம் குறையும் வரை ஜல் ஜீவன் மிஷன் பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்தல், ஆய்வு கூட்டங்கள் நடத்துதல் ஆகிய பணிகளை கலெக்டர் நிறுத்தி வைக்க வேண்டும். தூய்மை  பணியாளர்களுக்கு அரசாணையின்படி உயர்த்தி வழங்கப்பட்ட ₹3600 இதுவரை வழங்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 2 பேருக்கும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே  ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட கள பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பரிசோதனை  செய்ய வேண்டும்  என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: