8 லட்சம் பயணிகளுக்கு ₹44.5 கோடி முன்பதிவு கட்டணம் ஒப்படைப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் 8 லட்சம் ரயில் பயணிகளுக்கு ₹44.5 கோடி முன்பதிவு கட்டணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ரயில்நிலைய முன்பதிவு மையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளுக்கான பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.இதன்படி தெற்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, திருமயிலை, மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி ஆகிய ரயில்நிலையங்களின் முன்பதிவு மையங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை பயணக் கட்டணத்தை பெற்றுக் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

 மே 22ம் முதல் ஜூன் 22 வரை 8 லட்சம் பயணிகளுக்கு ₹44.5 கோடி பயணக் கட்டணத்தை தெற்கு ரயில்வே திருப்பி அளித்துள்ளது. சென்னை கோட்டத்தில் ₹12.83 கோடி, மதுரை கோட்டத்தில் ₹4.39 கோடி, சேலம் கோட்டத்தில் ₹6.62 கோடி, திருச்சி கோட்டத்தில் ₹4.42 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் ₹11.2 கோடி, பாலக்காடு கோட்டத்தில் ₹5.25 கோடி என்று மொத்தம் இதுவரை ₹44.5 கோடி பயணக்கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: