வேடந்தாங்கல் சரணாலயத்தை ஆய்வு செய்ய குழு

சென்னை : சென்னை ராயபுரத்தை சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு மிக அருகில் செயல்படும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன கழிவுநீர் சரணாலய பகுதி நீர்நிலைகளிலும், விவசாய நிலங்களிலும் கலக்கிறது.  எனவே, இதனை கண்டறிய நிபுணர் குழு ஏற்படுத்த வேண்டும்’ கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஸ்டான்லி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் துறை மூத்த அதிகாரி, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானிகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் குறித்து நன்கு அறிந்த தலைமை வன பாதுகாவலர் அந்தஸ்துக்கு குறையாத மூத்த வன அதிகாரி, காஞ்சிபுரம் கலெக்டர், மாவட்ட வன அதிகாரி கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து, விதிமீறல் குறித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: