வேளாண் பணிகளில் ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு வாய்ப்பு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை வேளாண் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்திட வேண்டும். அதன் மூலம் வேளாண்மை வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இத்திட்டம் இதுவரை ஏரி, குளம், குட்டை தூர்வாருதல், போன்ற வேளாண் பணிசார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஊரக வேலை திட்ட பணியாளர்களை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தினால் இன்று நிலவும் ஆள் பற்றாக்குறை நீக்கப்படும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தினால் அதன் மூலம் அவர்களுக்கும் வாழ்வாதாரம் உருவாக்கப்படும். வேளாண் தொழில் தங்கு தடையின்றி நடைபெற வழி வகுக்கும். இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையை விவசாயிகளை கலந்து, அரசு வகுக்க வேண்டும்.

Related Stories: