தமிழகத்தில் நெல்லை, தென்காசி உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 40 - 50 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, தென்கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: