செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் மூடல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் ஆலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 220 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி ஆணையர் டிட்டோ மற்றும் இளநிலை உதிவியாளர் லிடியா செல்லக்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நகராட்சி ஊழியர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தை மூடவேண்டும் என ஊழியர்கள், அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர், செங்கல்பட்டு ஆர்டிஒசெல்வம் நகராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி அலுவலகத்தை மூட உத்தரவிட்டார். மேலும், தற்காலிகாலிகமாக சமுதாயக்கூடத்தில், நகராட்சி அலுவலகத்தை செயல்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோன பரிசோதனை நடத்தப்பட்டது.

Related Stories: