சாத்தான்குளம் சம்பவம்: பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் வருகை

திருநெல்வேலி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார்  அடித்து கொன்றதாக ஊர்மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வந்துள்ளார்.

Related Stories: