சென்னையில் கொரோனா வைரஸ் அக்டோபரில் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் : மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரிக்கை

சென்னை : தலைநகர் சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரஸ், அக்டோபர் மாதத்தில் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளது. தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் வைரஸ் பரவலின் வேகம் சற்று குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரியுள்ளனர்.

ஆனால் இந்த மாத இறுதியில் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,000 ஆகவும் ஜூலை மத்தியில் அது 1.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறியுள்ளார். ஜூலை மத்தியில் தமிழ்நாடு முழுவதும் 2.7 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதில் சென்னையில் மட்டும் 60% தொற்று இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் பரவும் கொரோனா வைரஸ் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று அடுத்த 2 வாரங்களில் அதன் வீரியம் சற்று குறைய தொடங்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: