மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்க பிராத்திகிறேன்; பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து...!!!

புதுடெல்லி: உலக புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா மிகவும் உலக பிரசித்தி  பெற்றது. பூரி தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி தொடங்கி, 9 நாட்கள் நடப்பது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்  திருவிழாவிற்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்று, உச்ச நீதிமன்றமும் கடந்த 18ம் தேதி தேர் திருவிழாவுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவை மாற்றும்படி  கோரி  ஜகன்நாத் சான்ஸ்கிருதி ஜகரானா மன்ச் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இதையடுத்து, ‘பக்தர்கள் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவை நடத்துவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். உச்ச நீதிமன்றம் கடைசி நேரத்தில் நேற்று அனுமதி  அளித்தன் மூலம் திட்டமிட்டப்படி இன்று தேரோட்டம் தொடங்கவுள்ளது. இதற்காக, பூரி ஜெகன்நாதர் கோயிலில் இருந்து ரத யாத்திரைக்கு பூசாரிகள் மற்றும் சேவயாத் கர்த்தர் ஜகன்நாதரின் சிலை தேருக்கு கொண்டு வரப்பட்டு ரச யாத்திரை  தொடங்குவதற்காக பணி நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,   ‘பகவான் ஜெகந்நாதரின் ரத யாத்திரை நடைபெறும் புனிதமான இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த புனித நாள், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம்  மற்றும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறேன். ஜெய் ஜெகந்நாத்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: