காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: ஊரடங்கு காலத்தில் மின்தேவை குறைந்துள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல்: தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி தற்போது ஒரு நாளைக்கு 4 ஆயிரம் மெகாவாட் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் தண்ணீர் பந்தல்பாளையம் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக 50% ஊழியர்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதாரண காலங்களில் ஏற்படும் மின்தேவைகளை விட, ஊரடங்கு காலத்தில் மின்தேவை குறைந்துள்ளது என கூறினார். மேலும் அதனைத்தொடர்ந்து காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: