ராணுவத்தை அவமதிப்பதை நிறுத்துங்கள்....! சீன விவகாரம் தொடர்பான மன்மோகன் சிங் கருத்துக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பதில்

டெல்லி: கடந்த 15-ம் தேதி இரவு கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி  ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து  43 பேர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர்கள் இந்திய நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டதை மறந்து விட்டு, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சிப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2010 முதல் 2013 வரையிலான காலத்தில்,600 க்கும் மேற்பட்ட தடவைகள் சீனா இந்தியாவில் ஊடுருவல் நடத்தியதாகவும் தமது டுவிட்டர் பதிவில் நட்டா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; சீனப்படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது குறித்து விமர்சித்த மன்மோகன் சிங், அதை சீன ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக சித்தரித்து காட்டுகிறது. தயவுசெய்து எங்கள் படைகளை மீண்டும் மீண்டும் அவமதிப்பதை நிறுத்துங்கள், அவர்களின் வீரம் குறித்து கேள்வி எழுப்புங்கள். தேசிய ஒற்றுமையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள், குறிப்பாக இதுபோன்ற காலங்களில். மேம்படுத்துவதற்கு இது ஒருபோதும் தாமதமாகாது.

Related Stories: