உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கும் வண்டுகள்

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ.ஏ.எப் சாலை, இந்துக் கல்லூரி அருகே மத்திய அரசுக்கு சொந்தமான உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேமித்து வைக்கின்றனர். இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் சிறிய வண்டுகள் உற்பத்தியாககும். இந்த வண்டுகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவது வழக்கம். இதனை, ஒவ்வொரு ஆண்டும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருந்து தெளித்து கட்டுப்படுத்தி வருவார்கள்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் குறைந்த அளவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனால், மருந்து தெளிக்கும் பணியை ஊழியர்கள் சரவர செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தற்போது சேமிப்பு கிடங்கில் இருந்து வண்டுகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வெளியேறி வருகின்றன.  இவைகள் பட்டாபிராம் பகுதியான பாரதி நகர், திருவள்ளூர் நகர், கக்கன்ஜி நகர், தீனதயாளன் நகர், அண்ணா நகர், ராஜிவ் காந்தி நகர், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த வண்டுகள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: