புதிதாக 11 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிப்பு: ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானதால்

1. மாரியம்மன் கோயில் வீதி, சித்தன்குடி, சாரம் வருவாய் கிராமம்,

2. நந்தகோபால் கவுண்டர் வீதி, பெத்துசெட்டிப்பேட்டை, கருவடிக்குப்பம் வருவாய் கிராமம்,

3. சரஸ்வதி வீதி, ஸ்ரீநிவாசபுரம், வீமன் நகர், தட்டாஞ்சாவடி வருவாய் கிராமம்,

4. வாய்க்கால் வீதி, பிச்சவீரன்பேட், உழவர்கரை வருவாய்

5. மருத்துவமனை சாலை, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி வருவாய் கிராமம்,

6. நேசர் வீதி, இஸ்ரவேல் நகர் (கனரக போக்குவரத்து முனையம்), தட்டாஞ்சாவடி வருவாய் கிராமம்,

7. நேதாஜி வீதி, லட்சுமி நகர், லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் வருவாய் கிராமம்,

8. புதுத்தெரு, புதுப்பேட்டை, சாரம் வருவாய் கிராமம்,

9. முதல் குறுக்கு தெரு, தாகூர் நகர், சாரம் வருவாய் கிராமம்,

10. 2வது குறுக்கு தெரு, மரியாள் நகர், ரெட்டியார்பாளையம் வருவாய் கிராமம்,

11. குறுக்கு தெரு, பிப்டிக் சாலை, பிள்ளையார்குப்பம்பேட், கிருமாம்பாக்கம் வருவாய் கிராமம் ஆகிய 11 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அனைத்து வாகன நடமாட்டம், பொது போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

கோவிட் மருத்துவமனையில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகள் 6 பேர் குணமானதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 140 கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஜிப்மரில் நாள்பட்ட நோய்களுடன் ெகாரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். புதுச்சேரியில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,627 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சாலைகளில் சுற்றிய 1419 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஊரடங்கை மிறியதற்காக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: