வீடுவீடாக சோதனை செய்யும் பணியாளர்களுக்கு 10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் வழங்கப்படும்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 1 முதல் 15 மண்டலங்களில் வீடு வீடாக சோதனை செய்ய 10 ஆயிரம் களப்பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் மூலம் சோதனை செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவும், மருத்துவ முகாம்களில் பயன்படுத்துவதற்காகவும், 1 முதல் 15 மண்டலங்களுக்கு பத்தாயிரம் காய்ச்சலை கண்டறியும் வெப்பமானி கோட்ட நல மருத்துவ அலுவலர், வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள்,  கண்காணிப்பு மேற்பார்வையாளர்கள்    ஆகியோருக்கு10 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.  

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக, ஆயிரம் பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மீதமுள்ள அனைத்து மண்டலங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவ முகாம்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவிற்கு சிகிச்சைக்கு வருபவர்களின் நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றை பரிசோதிப்பதின் மூலம் உடனடியாக நோயின் தாக்கம் கண்டறியப்படுகிறது.  இந்த உபகரணங்கள்  மூலம் கொரோனா வைரஸ் தொற்றின்  அறிகுறிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மேல் சிகிச்சை தேவைப்படின் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா  பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க உத்தரவு

சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு விடுதியை ஏற்கனவே கொரோனா தடுப்பு முகாமிற்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள அனைத்து விடுதிகளையும் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: