ஊரடங்கு வேண்டாம் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்தாலே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம். எனவே, ஊரடங்கை நீட்டித்து கடந்த 17ம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் கொள்கை முடிவு ஊரடங்கு உத்தரவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். வழக்கு தொடர்ந்தவருக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டனர்.

Related Stories: