விருத்தாசலம் அம்மா உணவகத்தில் தரையில் அரிசியை கொட்டி கல்லை பிரிக்கும் ஊழியர்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்

விருத்தாசலம்: தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உலகமெங்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் விருத்தாசலம் பாலக்கரையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். ஆனால் இங்கு சுகாதாரமின்றி உணவு சமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று உணவு உண்பதற்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், நின்று கொண்டு உணவு உண்பதற்கும் பயன்படுத்தும் தரைப்பகுதியில் அரிசியை கொட்டி அதில் கல் மற்றும் உமியை பிரித்தெடுக்கும் பணியில் உணவக பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் கொரோனா வைரஸ் காரணமாக காலணிகளை வெளியே விட்டுவிட்டு உள்ளே நடந்து செல்லும் பாதையில் அரிசியைக் கொட்டி இதுபோன்ற பணியில் ஈடுபடுவதால் கொரோனா தொற்று உள்ள நபர்கள் பலர் இங்கு வந்து போகும் நிலை உள்ளது. எனவே மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தரையில் காய்கறி அரிசி உள்ளிட்ட உணவு தயாரிக்கும் பொருட்களை கொட்டுவதை தவிர்த்து தார்பாய் அல்லது பாய் போன்றவற்றில் அரிசியை கொட்டி கல், உமி அகற்ற வேண்டும். சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: