காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வரும் 19 முதல் 30ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் என காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை.மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகள் முழுவதும், குன்றத்தூர் ஒன்றியத்தில் அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், 2ம் கட்டளை, மவுலிவாக்கம், பெரியபரணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமுணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகள்.

மேற்கண்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெற தளர்வு அளிக்கப்படுகிறது. வாடகை ஆட்டோ, டாக்சி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் ஆட்டோ, டாக்சி அனுமதிக்கப்படும். சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: