சர்ச்சைக்குரிய புதிய வரைபடம் நேபாள நாடாளுமன்ற மேல்சபையில் தாக்கல்

காத்மாண்டு: சர்ச்சைக்குரிய புதிய வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்ற மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக இந்திய - நேபாள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சர்ச்சைக்குரிய புதிய நேபாள வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது. இதில், மசோதாவில் ஏதேனும் திருத்தம் செய்ய 72 மணி நேரம் உறுப்பினர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களில் இம்மசோதாவை நிறைவேற்ற நேபாள அரசு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதும், ஜனாதிபதி ஒப்புதலுடன் புதிய வரைபடம் நடைமுறைக்கு வரும்.

Related Stories: