விசாரணை என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போனை காங். அரசு ஒட்டு கேட்கிறது: ராஜஸ்தானில் பாஜ பதில் புகார்

ஜெய்பூர்: ‘எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் விசாரணை என்ற போர்வையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போனை காங்கிரஸ் அரசு ஒட்டு  கேட்கிறது,’ என ராஜஸ்தான் மாநில பாஜ குற்றம்சாட்டி உள்ளது.ராஜஸ்தானில் வரும் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க  பாஜ சதி செய்வதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதனால், காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள்  100 பேர் கடந்த 2 நாட்களாக சொகுசு விடுதியில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கெலாட்டின் குற்றச்சாட்டுகளை அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான பாஜவின் ராஜேந்திர ரத்தோர் மறுத்துள்ளார். அவர்  நேற்று அளித்த பேட்டியில், ‘‘எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்கான விசாரணை என்ற போர்வையில் கெலாட் அரசு, எதிர்க்கட்சி  எம்எல்ஏ.க்களின் போனை ஒட்டு கேட்கிறது. அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை  எடுக்கலாமே?’’ என்றார்.

Related Stories: