5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவன தலைவர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு: முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: வெளிநாட்டில் உள்ள 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும்  நிறுவனங்களின் தலைவர்களுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து  முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழகு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்பொழுது, கேட் ஸ்பேட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் லிஸ்ப்ரேஸர், பாசில் குழுமத்தின் தலைவர் கோஸ்டா கார்ட்கோடிஸ், நைக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜான் டான்ஹூ, அடிடாஸ் ஏஜி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் காஸ்பர் ரோர்ஸ்டட், மேட்டல் இங்க் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திருயோனன் கிரைஸ் ஆகிய 5 முன்னணி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும்  குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: