99வது பிறந்த நாள் இங்கி. இளவரசர் பிலிப்புக்கு வாழ்த்து

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் 99வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்கள் மூலமாக ராணுவம் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர்  பிலிப்பின் 99வது பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு விமரிசையாக இளவரசரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படவில்லை. ஆனால், அரச குடும்பத்தினர் ஜூம் உள்ளிட் சமூக ஊடகங்கள் மூலமாக அரசர் மற்றும் ராணியோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவு சார்பில் சமூக வலைதளங்கள் மூலமாக பிலிப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும், டிவிட்டரில் அரசர் கடந்த காலங்களில் பங்கேற்றபோது எடுத்த அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

Related Stories: