தொண்டை வலி என்று வந்த நோயாளியை 10 அடி தூரத்தில் நிற்க வைத்து டார்ச் லைட் அடித்து பரிசோதனை: வீடியோ வைரலானதால் டாக்டர், ஊழியருக்கு மெமோ

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு, வாலிபர் ஒருவர் தொண்டை வலியென்று சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது, நுழைவாயில் முன்பே தடுப்பு ஏற்படுத்தி  டாக்டர், மருத்துவ பெண் ஊழியர் அமர்ந்திருந்தனர். அந்த வாலிபரை 10 அடி தூரத்தில் தடுத்து, உடம்புக்கு என்ன என்று கேட்டபோது, தொண்டைவலி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். உடனே, அந்த டாக்டர் கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்து அந்த வாலிபரின் முகத்தில் அடித்து 10 அடி தூரத்தில் நிற்பவரின் தொண்டையை பரிசோதித்துள்ளார். கடமைக்காக சிகிச்சை அளித்த டாக்டர், உடனே, அருகில் இருந்த பல்நோக்கு மருத்துவ பெண் ஊழியர் மூலம் மாத்திரைகளை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனாஅச்சத்தில் வாலிபரை நீண்ட இடைவெளியில் நிறுத்தி சிகிச்சை அளித்ததை அருகிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. துகுறித்து, சுகாதார துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, பணியில் அலட்சியமாக இருந்தது குறித்து, சம்மந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர், பணியிலிருந்த டாக்டர், பெண் ஊழியரிடம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துள்ளார்.

Related Stories: