நீரவ் மோடியின் ரூ1,350 கோடி முத்து, வைரக் கற்கள் பறிமுதல்

புதுடெல்லி: இந்திய வங்கிகளில் ரூ13 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்று விட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி உள்ளிட்டோரை நாடு கடத்தி வர அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகள், இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து நீரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ எடை கொண்ட பாலிஷ் செய்யப்பட்ட முத்து, வைரக் கற்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ 1,350 கோடியாகும்.

மும்பை வந்து இறங்கிய 108 பெட்டி சரக்குகளில், 32 பெட்டி சரக்குகள் வெளிநாட்டு நிறுவனங்களை சேர்ந்தவை. இந்த வெளிநாட்டு நிறுவனங்களை நீரவ் மோடி நிர்வகித்து வருகிறார். மற்றவை மெகுல் சோக்சிக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. இவற்றை ஹாங்காங்கில் இருந்து கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமலாக்கத் துறை முடித்து விட்டது. எனவே, அவை விரைவில் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

Related Stories: