ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு; நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல...நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை...!

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும், தன்னார்வலர்களும் தங்கலால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகின்றனர். இதனைபோல், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜனிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள்  மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமாந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல  தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலத்தில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்.  ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: