சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி சாய்ந்து விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்துள்ள குஷால் நகரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி, கோவை செல்வதற்காக நேற்று மதியம் திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.
